TNPSC Group 2 Prelims Question Paper PDF 2025 for General Tamil, General English, General Studies and Mathematics for the TNPSC Group 2 Prelims Exam 2025 conducted on 28 September 2025 is available here in this blog article from Veranda RACE. To get the TNPSC Group 2 Prelims Question Paper PDF 2025 officially conducted by the TNPSC, candidates can refer to this given article. Candidates can also get the tentative TNPSC Group 2 Prelims Answer Key PDF 2025 for all subjects using the direct link provided here.
TNPSC Group 2 Prelims Question Paper PDF 2025 – Complete Question Paper – Click here
Veranda RACE’s TNPSC Group 2 Prelims Answer Key PDF 2025 –– Click here to Download
The TNPSC Group 2 Prelims Exam 2025 was successfully conducted by the Tamil Nadu Public Service Commission (TNPSC) at various TNPSC Group 2 exam centres across Tamil Nadu in all 38 districts on 28 September 2025.
The TNPSC Group 2 Prelims Exam 2025 was officially conducted to recruit eligible candidates for 645 Group 2 & 2A vacancies, which will be filled in various departments and organisations of the Tamil Nadu Government.
The TNPSC Group 2 Official Notification PDF 2025 was officially announced by the Tamil Nadu Public Service Commission (TNPSC) on 15 July 2025 for the direct recruitment of 50 Group 2 vacancies and 595 Group 2A vacancies in Group 2 and 2A services in the Tamil Nadu Government.
Total Number of Applications: 5,53,634
Total Number of General Tamil Applications: 4,47,421
Total Number of General English Applications: 1,06,213
Total Number of Male Candidates: 2,12,495
Total Number of Female Candidates: 3,41,114
Total Number of Third Gender Candidates: 25
Total Number of TNPSC Group 2 Prelims Exam Centres: 1905
After the completion of the TNPSC Group 2 Prelims Exam 2025, candidates who did not appear for the exam but want to view the TNPSC Group 2 Prelims Question Paper 2025 can refer to this Veranda RACE article to download the official question paper held on 28 September 2025.
Veranda RACE has given a direct link to download the official TNPSC Group 2 Prelims Question Paper PDF 2025 for General Tamil, General English, General Studies and Mathematics.
Our Veranda RACE experts will also share the tentative TNPSC Group 2 Prelims Answer Key PDF on 28 September 2025 itself. Candidates can also get the answer key PDF using the direct link to download the TNPSC Group 2 Prelims Answer Key PDF by Veranda RACE here in this article itself.
The TNPSC Group 2 Prelims Question Paper 2025 consists of 200 questions and was a single objective question paper for both Group 2 and 2A service vacancies in the Tamil Nadu Government.
It consisted of the following subjects:
General English / General Tamil
General Studies
Aptitude and Mental Ability / Mathematics
Candidates can download the official TNPSC Group 2 Prelims Question Paper PDF 2025 for General Tamil, General English, General Studies and Mathematics here using the direct link from Veranda RACE here:
Apart from this, for the convenience of the TNPSC Group 2 Exam candidates, Veranda RACE will also come up with the detailed TNPSC Group 2 Prelims Answer Key PDF 2025 with answers and explanations by Veranda RACE erudite TNPSC experts with years of experience.
Candidates who attended the TNPSC Group 2 Prelims Exam 2025 across various exam centres on 28 September 2025 felt that they lacked time management to answer the questions. The General Tamil section was moderate, while the General English section questions ranged from easy to moderate. Candidates can also view our Veranda RACE TNPSC YouTube Channel to check the detailed explanation and analysis of the TNPSC Group 2 Prelims Question Paper 2025.
Candidates who want to download the official TNPSC Group 2 Prelims Exam Question Paper 2025 can use our direct download link from Veranda RACE without having to wander across various links.
Candidates who have attended the TNPSC Group 2 Prelims Exam 2025 on 28 September 2025 can wait for the official TNPSC Group 2 Prelims Answer Key 2025 PDF that will be released by the Tamil Nadu Public Service Commission.
It will be usually available for download on the TNPSC official website within 15 to 30 days after the completion of the TNPSC Group 2 Prelims Exam.
Veranda RACE will update the official TNPSC Group 2 Prelims Answer Key PDF 2025 once it is available on the TNPSC official website.
Meanwhile, candidates can download the TNPSC Group 2 Prelims Answer Key PDF for the General Tamil, General English, General Studies and Mathematics subjects with answers marked by Veranda RACE’s experienced faculty and mentors.
Candidates can also check Veranda RACE’s TNPSC YouTube channel to view the live discussion and analysis of the TNPSC Group 2 Prelims Exam Question Paper on 28 September 2025.
Candidates need to remember that Answer key released here in Veranda RACE on 28 September 2025 is not the official answer key. It is a tentative answer key prepared by Veranda RACE’s experts to help the TNPSC Group 2 Prelims candidates analyse their exam performance and arrive at a cutoff to predict their chances of qualifying for the TNPSC Group 2 Mains Exam 2025.
The following Group 2 posts and their number of vacancies were released by the TNPSC during the release of the TNPSC Group 2 Exam Official Notification PDF 2025:
1.Assistant Inspector – Tamil Nadu Labour Department
2.Junior Employment Officer (Non-Differently Abled) – Tamil Nadu Employment Training Department
3.Junior Employment Officer (Differently Abled) – Tamil Nadu Employment Training Department
4.Probation Officer – Tamil Nadu Children Welfare and Special Services Department
5.Probation Officer – Tamil Nadu Prisons and Correctional Services Department
6.Sub Registrar (Grade II) – Tamil Nadu Registration Department
7.Special Branch Assistant – Greater Chennai Police Department
8.Special Branch Assistant – Tamil Nadu Criminal Investigation Department
9.Assistant Section Officer – Tamil Nadu Public Service Commission
10.Forester – Tamil Nadu Forest Department
11.Forester – Tamil Nadu Forest Plantation Corporation Limited
The following Group 2A service posts and their number of vacancies were released by the TNPSC during the release of the TNPSC Group 2 Exam Official Notification PDF 2025:
1.Senior Inspector – Milk Production and Dairy Development
2.Assistant Inspector – Local Fund Audit
3.Audit Inspector – TN HRCE Department
4.Supervisor / Junior Superintendent – Agricultural Marketing and Agri Business
5.Assistant (Grade III) – Tamil Nadu Industrial Investment Corporation Limited
6.Assistant – Tamil Nadu Commercial Taxes Department
7.Senior Revenue Inspector – Tamil Nadu Revenue Administration and Disaster Management Department
8.Assistant – Civil Supplies and Consumer Protection Department
9.Assistant – Animal Husbandry and Veterinary Sciences
10.Assistant – Industries and Commerce Department
11.Assistant – Police Department
12.Assistant – Medical and Rural Health Services Department
13.Assistant – Transport Department
14.Assistant – Registration Department
15.Assistant – Public Health and Preventive Medicine Department
16.Assistant – Fisheries and Fisherman Welfare Department
17.Assistant – Labour Department
18.Assistant – Highways Department
19.Assistant – Backward Classes Welfare Department
20.Assistant – Children Welfare and Special Services Department
21.Assistant – Urban Land Ceiling and Urban Land Tax Department
22.Assistant – National Cadet Corps
23.Assistant – School Education Department
24.Assistant – Stationery and Printing Department
25.Assistant – Prisons and Correctional Services Department
26.Assistant / Accountant – Sericulture Department
27.Executive Officer (Grade III) – TN HRCE Department
28.Assistant – Tamil Nadu State Election Commission
29.Assistant – Tamil Nadu Public Service Commission
30.Assistant – Tamil Nadu Legislative Assembly
31.Lower Division (Counter) Clerk – Tamil Nadu Legislative Assembly
பகுதி-அ - பொதுத் தமிழ் | General Tamil
வினாக்கள் : 1-100
1.
கூற்று : ஏது?, யாது?, என்னும் சொற்கள் சுட்டுச் சொற்களாகும்.
காரணம் : ஏ, யா, என்ற சுட்டெழுத்தை அடிப்படையாகக் கொண்டு சொற்கள் அமைந்துள்ளன.
(A) கூற்று சரி; காரணம் தவறு
(B) கூற்று சரி; காரணம் சரி
(C) கூற்று தவறு; காரணம் சரி
(✔) கூற்று தவறு; காரணம் தவறு
(E) விடை தெரியவில்லை
2.
பொருத்துக :
| சொற்கள் | இலக்கணம் |
|---|---|
| (a) அது, நாய் | 1. அஃறிணை பன்மை |
| (b) அவர், அவர்கள் | 2. உயர்திணைப் பெண்பால் ஒருமை |
| (c) அவை, நாய்கள் | 3. அஃறிணை ஒருமை |
| (d) தங்கை | 4. உயர்திணைப் பன்மை |
(a) (b) (c) (d)
(✔) 3 4 1 2
(B) 3 1 2 4
(C) 2 3 4 1
(D) 4 2 3 1
(E) விடை தெரியவில்லை
கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடு :
பத்தி:
நேற்றைப் போல் இன்று இல்லை, இன்று போல் நாளை இல்லை என்கிற நியதியை அறிந்து நாளும் கற்கிற கட்டாயம் வருகிறபொழுது நாம் மீளவும் இளையோராகி பயிலத் தொடங்குகிறோம். புறத் தேவைகளுக்கான அறிவுசார் நூல்களும் அகத்தேவைகளுக்கான அறம்சார் நூல்களும் நம் முன் பக்கங்களாய் விரிந்து கிடக்கின்றன. மனிதன் இரு கால்களை ஊன்றி நடக்கப்பழகியதில் இருந்து பெற்ற வளர்ச்சிக்கு இன்னும் முடிவில்லை. நடை ஒன்று தான் நம் உடல் நலம் பேணும் பயிற்சிகளில் முதன்மையான ஒன்று என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். அது புறநடை. அதுபோல் இளமையில் கற்கத் தொடங்கிய அகநடைப் பயிற்சி காலம் முழுவதும் தொடர வேண்டிய ஒன்றாக இருக்கிறது. இளமையில் கற்றல் என்பது இளமையாகவே இருக்க உதவும் கலையாக கல்வி மலர்கிறது என்பதை உணர்த்துகிறது.
3.
உள்ளத்தேவைகளுக்காக நம் முன் இருப்பவை எவை?
(A) கல்வி
(B) அறிவுசார் நூல்கள்
(✔) அற நூல்கள்
(D) கலைக்கூடங்கள்
(E) விடை தெரியவில்லை
4.
இளமையாக இருக்க உதவும் கலை எது?
(A) அகநடைப் பயிற்சி
(B) புறநடைப்பயிற்சி
(C) மருத்துவம்
(✔) கல்வி
(E) விடை தெரியவில்லை
5.
மருத்துவர்கள் வலியுறுத்தும் பயிற்சிகளில் முதன்மையானது எது?
(✔) புறநடைப்பயிற்சி
(B) அகநடைப்பயிற்சி
(C) மூச்சுப்பயிற்சி
(D) வாசிப்புப்பயிற்சி
(E) விடை தெரியவில்லை
6.
வாழ்நாள் காலம் முடியும் வரை பின்பற்றவேண்டிய ஒன்று எது?
(A) புறநடைப்பயிற்சி
(✔) அகநடைப்பயிற்சி
(C) வாசிப்புப்பயிற்சி
(D) ஒழுக்க நெறிகள்
(E) விடை தெரியவில்லை
7.
கற்க வேண்டும் என்ற அவசியம் வருகின்ற போது நாம் எவ்வாறு மாறுகிறோம்?
(A) படிப்பாளிகளாக
(B) அறிஞர்களாக
(C) ஆரோக்கியமாக
(✔) இளமையாக
(E) விடை தெரியவில்லை
8.
‘மீதூண் விரும்பேல்’ என்ற ஆத்திச்சூடிக்குத் தொடர்புடைய பழமொழியைக் கண்டறிக.
(A) நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
(B) நீரடித்து நீர் விலகாது
(C) உப்பிட்டவரை உள்ளளவும் நினை
(✔) நொறுங்கத் தின்றால் நூறு வயது
(E) விடை தெரியவில்லை
9.
புவியியல் மற்றும் சுரங்க ஆணையர் அலுவலகத்தில் உள்ள வேதியியல் ஆய்வகம் ரூபாய் 2 கோடி செலவில் மேம்படுத்தி புதுப்பிக்கப்படும் என்னும் அறிவிப்பு எத்துறைச் சார்ந்ததென்று கண்டறிக?
(✔) இயற்கை வளங்கள் துறை
(B) உயர்கல்வித் துறை
(C) சுற்றுச்சூழல் துறை
(D) வனத்துறை
(E) விடை தெரியவில்லை
10.
உதகை - என்ற மரூஉ சொல்லின் ஊர்ப் பெயரைக் கண்டறிக.
(A) ஒரு கை மண்டலம்
(✔) உதக மண்டலம்
(C) ஊத்துக் கோட்டை
(D) மலைநாடு
(E) விடை தெரியவில்லை
11.
பிழை திருத்துக.
மனிதன் மொழியின் வளர்ச்சி கண்டு, அது எவ்வளவு அருமையான கருவி என்பதை உணர்ந்தான்.
(A) அது
(✔) அஃது
(C) இது
(D) இஃது
(E) விடை தெரியவில்லை
12.
இவனுக்கு வீடு ஒன்று _________ இரண்டு இருக்கிறது.
(A) மற்றும்
(B) இல்லை
(✔) அல்லது
(D) தான்
(E) விடை தெரியவில்லை
13.
"EVILDOER” என்னும் ஆங்கிலச் சொல்லிற்கு தமிழ்ச்சொல் கண்டறிக.
(A) அளவை
(B) அறிவாளர்
(✔) கெடுப்பவர்
(D) நெஞ்சுகலப்பவர்
(E) விடை தெரியவில்லை
14.
ஆங்கிலச் சொல்லுக்கு இணையான சொல்லை அறிந்து எழுதுக.
'Omniscient'
(A) திடுக்கிட்ட நிலை
(B) குழப்ப நிலை
(C) எதுவும் அறியாத நிலை
(✔) எல்லாம் அறிந்த நிலை
(E) விடை தெரியவில்லை
15.
மறு ஆய்வு மனு என்பதை ஆங்கிலத்தில் ___________ என்றழைப்பர்.
(A) Writ Petition
(B) Habeas Corpus
(✔) Review Petition
(D) Revision Petition
(E) விடை தெரியவில்லை
16.
பிழையற்ற அஃறிணைப் பன்மைத் தொடரைக் கண்டறிக.
(A) அவள் அல்லள்
(B) மரம் அன்று
(✔) அவை அல்ல
(D) அவன் அல்ல
(E) விடை தெரியவில்லை
17.
சரியான தொடரைத் தேர்வு செய்க.
(A) மாடுகள் மேய்ந்தது
(B) பறவைகள் பறந்தது
(C) மரம் வளர்ந்தன
(✔) செடி கொடிகள் காற்றில் அசைந்தன
(E) விடை தெரியவில்லை
18.
பிழையற்ற தொடரைக் கண்டறிக.
(A) ஆடு வந்தாள்
(B) மகடு வந்தான்
(✔) மகடூ வந்தாள்
(D) சாத்தி வந்தான்
(E) விடை தெரியவில்லை
19.
'இலஞ்சி' என்ற சொல் எம்மொழிச் சொல்லென்று கண்டறிக.
(A) டச்சு
(B) பிரெஞ்சு
(C) போர்ச்சுகீசியம்
(✔) தமிழ்
(E) விடை தெரியவில்லை
20.
சுருக்கக் குறியீட்டு விளக்கம்
உத்தமம்
(✔) உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்
(B) உலகத் தமிழ் மன்றம்
(C) உலகத் தமிழாராய்ச்சி மன்றம்
(D) உலகத் தமிழ்ச் சங்கம்
(E) விடை தெரியவில்லை
21.
தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.
(A) சாலி
(B) பொத்தான்
(C) சோப்பு
(✔) பிண்டம்
(E) விடை தெரியவில்லை
22.
பொருத்துக:
| (a) Bracings | 1. பைஞ்சுதை |
|---|---|
| (b) Briquette | 2. மெல்லுறை |
| (c) Cement | 3. கட்டுச்சட்டங்கள் |
| (d) Veneer | 4. கட்டி |
(a) (b) (c) (d)
(✔) 3 4 1 2
(B) 4 3 1 2
(C) 2 4 1 3
(D) 3 1 4 2
(E) விடை தெரியவில்லை
23.
பொருத்துக :
| (a) கடற்கரைச் சாலை | 1. ஏழாம் வேற்றுமைத்தொகை மூன்றாம் வேற்றுமை உருபும் |
|---|---|
| (b) புதுமனைப் புகுவிழா | 2. பயனும் உடன்தொக்க தொகை |
| (c) உரிமைக் குரல் | 3. ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை |
| (d) பருத்தித் துணி | 4. நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை |
(a) (b) (c) (d)
(A) 3 2 4 1
(B) 3 4 1 2
(C) 3 1 4 2
(✔) 4 3 1 2
(E) விடை தெரியவில்லை
24.
பொருள் கண்டறிக :
ம, மா
(A) வண்டு, ஆகாயம்
(B) இயமன், இளமை
(C) மண், மான்
(✔) இயமன், வண்டு
(E) விடை தெரியவில்லை
25.
னகர ணகர நகர வேறுபாட்டில் - பொருத்துக.
| (a) அன்னாள் | 1. முற்காலத்தில் |
|---|---|
| (b) உன்னால் | 2. என்று சொல்லாள் |
| (c) முன்னாள் | 3. நினைத்தல் |
| (d) என்னாள் | 4. அவள் |
(a) (b) (c) (d)
(A) 3 4 1 2
(B) 3 1 2 4
(C) 4 1 3 2
(✔) 4 3 1 2
(E) விடை தெரியவில்லை
26.
தொழில்நுட்பச் சொற்களைப் பொருத்துக :
| (a) Nautical mile | 1. மணல் தொடுவரை |
|---|---|
| (b) Natric horizon | 2. நெப்டியூனின் துணைக்கோள் |
| (c) Narbonnaise | 3. 1852 |
| (d) Nalad | 4. மழை புயற்காற்று |
(a) (b) (c) (d)
(✔) 3 1 4 2
(B) 3 4 1 2
(C) 4 3 2 1
(D) 4 1 2 3
(E) விடை தெரியவில்லை
27.
கீழ்க்காணும் கலைச்சொற்களைப் பொருத்துக :
| (a) Nanotechnology | 1. அறிவாளர் |
|---|---|
| (b) Biotechnology | 2. விண்வெளித் தொழில்நுட்பம் |
| (c) Spacetechnology | 3. உயிர்த் தொழில்நுட்பம் |
| (d) Intellectual | 4. மீநுண் தொழில்நுட்பம் |
(a) (b) (c) (d)
(✔) 4 3 2 1
(B) 3 2 1 4
(C) 4 2 1 3
(D) 1 2 4 3
(E) விடை தெரியவில்லை
28.
பொருத்துக :
| அடி | தாவரம் |
|---|---|
| (a) தட்டு | 1. வேம்பு |
| (b) கழி | 2. மூங்கில் |
| (c) கழை | 3. சோளம் |
| (d) அடி | 4. கரும்பு |
(a) (b) (c) (d)
(✔) 3 4 2 1
(B) 3 2 4 1
(C) 4 3 1 2
(D) 2 3 4 1
(E) விடை தெரியவில்லை
29.
யானையின் ஒலி மரபைக் கண்டறிக.
(A) அலப்பும்
(✔) பிளிறும்
(C) எக்காளமிடும்
(D) கதறும்
(E) விடை தெரியவில்லை
30.
'மானின்' தொகை மரபுச் சொல்லைக் கண்டறிக.
(A) மந்தை
(✔) நிரை
(C) கணம்
(D) கூட்டம்
(E) விடை தெரியவில்லை
31.
ஒற்றுப்பிழையைச் சரி செய்க :
வள்ளலார் அருளிய வழிகளை கடைபிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.
(A) வள்ளலார் அருளிய வழிகளை கடைப்பிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.
(B) வள்ளலாரருளிய வழிகளைக் கடைபிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.
(C) வள்ளலார் அருளிய வழிக்களைக் கடைப்பிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.
(✔) வள்ளலார் அருளிய வழிகளைக் கடைப் பிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.
(E) விடை தெரியவில்லை
32.
பிழையற்ற தொடரைத் தேர்க :
(✔) அமைச்சர் பதவியேற்றவுடன் பாராட்டுகள் குவிந்தன. தொண்டர்கள் பரிசுப் பொருட்களைக் குவித்தனர்.
(B) அமைச்சர் பதவியேற்றவுடன் பாராட்டுகள் குவித்தனர். தொண்டர்கள் பரிசுப் பொருட்களைக் குவித்தனர்.
(C) அமைச்சர் பதவியேற்றவுடன் பாராட்டுகள் குவித்தனர். தொண்டர்கள் பரிசுப் பொருட்களைக் குவிந்தனர்.
(D) அமைச்சர் பதவியேற்றவுடன் பாராட்டுகள் குவிந்தனர். தொண்டர்கள் பரிசுப் பொருட்களைக் குவிந்தனர்.
(E) விடை தெரியவில்லை
33.
மோந்து பார்த்தால் வாடிவிடும் அனிச்சம் மலர். என்ன செய்தால் வாடுவர் விருந்தினர்?
(A) வரவேற்கவில்லையானால்
(B) இனியமொழி பேசவில்லையானால்
(✔) முகம் திரிந்து நோக்கினால்
(D) வேறுபாட்டுடன் நடத்தினால்
(E) விடை தெரியவில்லை
34.
"Assailant” - என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ்ச்சொல்.
(✔) தாக்குபவர்
(B) முன் மரபினர்
(C) உறவினர்
(D) புனைவு நபர்
(E) விடை தெரியவில்லை
35.
பொருத்துக :
| (a) Arete | 1. கரிமண் பாறை |
|---|---|
| (b) Arenaceous rock | 2. கத்திமுனைக் குன்று |
| (c) Argillaceous rock | 3. இடையாழ கிரானைட்டு பாறை |
| (d) Aplite | 4. மணற் பாறை |
(a) (b) (c) (d)
(A) 3 4 2 1
(B) 3 1 4 2
(C) 2 1 4 3
(✔) 2 4 1 3
(E) விடை தெரியவில்லை
36.
... நாற்றிசையும் செல்லாத நாடுஇல்லை – அந்நாடு
வேற்றுநாடு ஆகா தமவேஆம் ஆயினால்
ஆற்றுணா வேண்டுவது இல் (பழமொழி நானூறு - 4)
இப்பாடலில் இன எழுத்து இடம்பெற்ற சொல் எது?
(A) நாடு இல்லை
(B) தமவே ஆம்
(C) ஆற்றுணா
(✔) வேண்டுவது
(E) விடை தெரியவில்லை
37.
உறுதிக் கூற்று : சுட்டெழுத்துகளை இடச்சுட்டுக்கள் என்றும் குறிக்கலாம்.
காரணம் : அகம், புறம் எனச் சுட்டெழுத்துகள் நிற்கும் இடத்தைப் பொறுத்துப் பெயர் குறிப்பிடப்படுகின்றது.
(A) உறுதிக்கூற்று சரி காரணம் தவறு
(B) இரண்டும் தவறு
(C) உறுதிக்கூற்று தவறு காரணம் சரி
(✔) இரண்டும் சரி
(E) விடை தெரியவில்லை
38.
தொல்காப்பியர் குறிப்பிடும் உவன், உவள், உவர், உது, உவை என்பன
(A) அண்மைச் சுட்டு
(✔) இடைநிலைச் சுட்டு
(C) சேய்மைச் சுட்டு
(D) சுட்டுத் திரிபு
(E) விடை தெரியவில்லை
39.
மரபுத் தொடர்களைப் பொருளோடு பொருத்துக :
| (a) கானல் நீர் | 1. விட்டுவிடுதல் |
|---|---|
| (b) கரையேறுதல் | 2. உறுதியாகப்பற்றுதல் |
| (c) கைகழுவுதல் | 3. கிடைக்காத ஒன்று |
| (d) குரங்குப்பிடி | 4. துன்பத்திலிருந்து மீளுதல் |
(a) (b) (c) (d)
(✔) 3 4 1 2
(B) 4 1 3 2
(C) 1 4 2 3
(D) 2 1 3 4
(E) விடை தெரியவில்லை
40.
'கடுக்காய்க் கொடுத்தல்' என்னும் மரபுத்தொடரின் சரியான பொருளைக் கண்டறிக.
(A) மாற்றிப் பேசுதல்
(✔) ஏமாற்றுதல்
(C) குறுக்கிடுதல்
(D) பிடிவாதம் காட்டுதல்
(E) விடை தெரியவில்லை
41.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்” - இப்பாடல் வரியில் “கேளிர்” என்னும் சொல்லிற்கு எதிர்ச்சொல் தருக.
(A) சகோதரி
(B) நண்பர்
(C) உறவினர்
(✔) பகைவர்
(E) விடை தெரியவில்லை
42.
ஓரெழுத்து ஒரு மொழியைப் பொருத்துக :
| (a) க | 1. உறுதி |
|---|---|
| (b) ஞா | 2. கொள்ளுகை |
| (c) தே | 3. பறவை |
| (d) நி | 4. அரசன் |
(a) (b) (c) (d)
(A) 4 3 2 1
(B) 4 1 3 2
(C) 3 4 1 2
(✔) 3 4 2 1
(E) விடை தெரியவில்லை
43.
"மனைக்கு விளக்கம் மடவார் ; மடவார் தனக்குத் தகைசால் புதல்வர்;" - என்ற அடிகள் இடம்பெறும் நீதி நூலைக் கண்டறிக.
(A) நாலடியார்
(B) திருக்குறள்
(C) இன்னா நாற்பது
(✔) நான்மணிக்கடிகை
(E) விடை தெரியவில்லை
44.
"கல்வி சிறந்தன்று ஒழுக்கமுடைமை" என்ற அடி இடம்பெற்றுள்ள நூல்
(A) நாலடியார்
(✔) முதுமொழிக்காஞ்சி
(C) பழமொழி நானூறு
(D) இன்னா நாற்பது
(E) விடை தெரியவில்லை
45.
ஏலாதியில் கூறப்பட்டுள்ள சமணத்திற்கே உரிய அறக்கருத்து
(A) தண்டாமை
(B) ஒழுக்கமுடைமை
(✔) கொல்லாமை
(D) அறிவுடைமை
(E) விடை தெரியவில்லை
46.
சரியான திருக்குறளைக் கண்டறிக.
(A) சொல்லுக சொல்லில் சொல்லற்க பயனுடைய சொல்லில் பயன்இலாச் சொல்
(B) சொல்லில் சொல்லுக சொல்லற்க பயனுடைய சொல்லில் பயன்இலாச் சொல்
(C) சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லில் சொல்லற்க பயன்இலாச் சொல்
(✔) சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயன்இலாச் சொல்
(E) விடை தெரியவில்லை
47.
செயப்பாட்டுவினைத் தொடரைக் கண்டறிக.
(A) குமரன் பாடம் பயின்றான்
(B) இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் இயற்றினார்
(C) கபிலர் குறிஞ்சிப்பாட்டு இயற்றினார்
(✔) தை கொண்டாடப் பெற்றது
(E) விடை தெரியவில்லை
48.
குமணன் நடந்தான் – இத்தொடர் உணர்த்தும் வினையைக் கண்டறிக.
(✔) தன்வினை
(B) பிறவினை
(C) பொதுவினை
(D) எதிர்மறை வினை
(E) விடை தெரியவில்லை
49.
'சொல்' என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைக் கண்டறிக.
(A) சொல்லாமை
(B) சொல்லா
(✔) சொல்லிய
(D) சொல்லுகின்ற
(E) விடை தெரியவில்லை
50.
“அறியாத பையன்” – என்பது எவ்வகை பெயரெச்சத்தைக் குறிக்கிறது?
(✔) இறந்தகாலப் பெயரெச்சம்
(B) எதிர்காலப் பெயரெச்சம்
(C) குறிப்புப் பெயரெச்சம்
(D) தெரிநிலைப் பெயரெச்சம்
(E) விடை தெரியவில்லை
51.
'சிறிய கடிதம்' - இத்தொடரின் எச்ச வகை கண்டறிக.
(A) இறந்தகாலப் பெயரெச்சம்
(B) நிகழ்காலப் பெயரெச்சம்
(✔) குறிப்புப் பெயரெச்சம்
(D) எதிர்காலப் பெயரெச்சம்
(E) விடை தெரியவில்லை
52.
ஆங்கிலச் சொல்லைக் கண்டறிக.
(A) அலமாரி
(B) துட்டு
(✔) லாந்தர்
(D) உயில்
(E) விடை தெரியவில்லை
53.
உவமைத் தொடர்களுக்கு ஏற்ற சரியான பொருளைப் பொருத்துக :
| (a) ஆண்டிகள் மடம் கட்டியது போல | 1. போலி |
|---|---|
| (b) ஆற்றில் கரைத்த புளி போல | 2. மிக அரிது |
| (c) கரடி பிறை கண்டது போல | 3. பயனற்ற செயல் |
| (d) உள்ளீடற்ற புதர் போல | 4. உருவாகாத் திட்டம் |
(a) (b) (c) (d)
(✔) 4 3 2 1
(B) 4 1 3 2
(C) 3 1 4 2
(D) 3 4 2 1
(E) விடை தெரியவில்லை
54.
"நீர்மேல் எழுத்துப்போல” என்ற உவமைத்தொடரின் சரியான பொருளைத் தேர்க :
(A) இயலாமை
(B) நிலைத்தன்மை
(C) உறுத்தலின்மை
(✔) நிலையற்ற தன்மை
(E) விடை தெரியவில்லை
55.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக :
(A) செற்றார்
(✔) உற்றார்
(C) நண்ணார்
(D) ஒன்னார்
(E) விடை தெரியவில்லை
56.
அகரவரிசைப்படி சொற்களை அமைக்க :
(A) கருவூலம், களத்துமேடு, கவரிமான், கலம்பூச்சு
(B) கவரிமான், கருவூலம், களத்துமேடு, கலம்பூச்சு
(✔) கருவூலம், கலம்பூச்சு, கவரிமான், களத்துமேடு
(D) கலம்பூச்சு, கவரிமான், கருவூலம், களத்துமேடு
(E) விடை தெரியவில்லை
57.
உ.வே.சாமிநாதரின் வாழ்க்கை வரலாற்று நூலின் பெயர் _________.
(A) மனவாசம்
(B) சுய சரிதம்
(✔) என் சரிதம்
(D) என் கதை
(E) விடை தெரியவில்லை
58.
பெருஞ்சித்திரனாரால் நடத்தப்படாத இதழைத் தெரிவு செய்க
(A) தென்மொழி
(B) தமிழ்ச்சிட்டு
(✔) தேசபக்தன்
(D) தமிழ் நிலம்
(E) விடை தெரியவில்லை
59.
“கனலி” என்ற சொல்லைக் குறிக்காத சொல்லைத் தேர்க.
(A) சூரியன்
(B) நெருப்பு
(✔) பன்றி
(D) கரும்பு
(E) விடை தெரியவில்லை
60.
சரியான தொடரைக் கண்டறிக.
(A) கிளைகள் முறிந்து விழுந்தது.
(B) மரம் வேகமாக வளர்ந்தன.
(✔) குரங்குகள் மரத்திற்கு மரம் தாவின.
(D) யானைகள் குட்டிகளுடன் சென்றது.
(E) விடை தெரியவில்லை
61.
பொருத்தமான காலத்தைச் சுட்டுக :
“கோவலன் மதுரை மாநகருக்குள் செல்கிறான்”.
(A) இறந்தகாலம்
(✔) நிகழ்காலம்
(C) எதிர்காலம்
(D) எதிர்காலம்
(E) விடை தெரியவில்லை
62.
புலவாய், நல்வி, உறை ஆகியவற்றின் பெண்ணைக் குறிக்கும் சொல்லைக் கண்டறிக.
(✔) பிணை
(B) நாகு
(C) அளகு
(D) பெண்மை
(E) விடை தெரியவில்லை
63.
எதிர்ச்சொற்களைப் பொருத்துக :
| (a) அணுகு | 1. தெளிவு |
|---|---|
| (b) ஐயம் | 2. சோர்வு |
| (c) ஊக்கம் | 3. பொய்மை |
| (d) உண்மை | 4. விலகு |
(a) (b) (c) (d)
(✔) 4 1 2 3
(B) 4 3 1 2
(C) 3 4 2 1
(D) 2 3 4 1
(E) விடை தெரியவில்லை
64.
எதிர்ச்சொல்லைக் கண்டறிக :
எந்தை
(✔) நுந்தை
(C) நொந்தை
(B) தந்தை
(D) எந்தாய்
(E) விடை தெரியவில்லை
65.
பிழையான தொடரைக் கண்டறிக.
(A) போர்க்களத்தில் வீரர்கள் கலத்தில் நீர் அருந்தினர்.
(B) அரசாணையைக் கண்டதும் ஆனைகள் காட்டிற்குள் விடப்பட்டன.
(C) குறைவில்லாமல் உண்ட நாய் குரைத்தது.
(✔) பெருமலையைக் கண்டதும் மக்கள் மழைத்து போய்விட்டனர்.
(E) விடை தெரியவில்லை
66.
போர்டு, அரசினர் இவர்களிடமிருந்து வரும் முக்கிய கடிதக் குறிப்புக்களின் தனிப்பதிவேடு :
விதிகள் மற்றும் விதிமுறைகள் :
அரசினரிடமிருந்து வரும் முக்கியமான நேர்முகக் கடிதங்கள், கடிதக் குறிப்புகள் இவற்றிற்குத் தயக்கமில்லாமல் விடைகள் அனுப்புவதைக் கவனிப்பதற்கு இது ஏற்பட்டது. இது இணைப்பு 'ஆ' - XVI எண் படிவத்தில் வைக்கப்பட வேண்டும். இதனை நேர்முக உதவியாளர் வைத்துவருவார், உடனுக்குடன் தயக்கமில்லாமல் இத்தகைய கடிதக் குறிப்புகளுக்கும் நினைவூட்டுகளுக்கும் விடை செல்வதை அவர் நேர்முகமாகக் கவனித்து வருவார். மாவட்ட ஆட்சியர் தலைமை இடத்தில் இருக்கும்போது அன்றாடம் அவருடைய பார்வைக்கு இது அனுப்பப்படவேண்டும்.
மாவட்ட ஆட்சித் தலைவரின் அன்றாடப் பார்வைக்கு அனுப்ப வேண்டிய பதிவேட்டைக் கண்டறிக.
(A) வருகைப் பதிவேடு
(B) தாமத வருகைப் பதிவேடு
(✔) கடிதக் குறிப்புக்களின் தனிப்பதிவேடு
(D) சுத்த நகல் பதிவேடு
(E) விடை தெரியவில்லை
67.
உயிரியியலில் “Abulomania” என்னும் ஆங்கிலச் சொல்லிற்கு இணையான கலைச்சொல் தருக.
(A) பகுதி
(B) மிகுதியான கட்டுப்பாடுகள்
(C) உண்ணிபோன்ற
(✔) மனநோய்
(E) விடை தெரியவில்லை
68.
'வேர்க்குரு' என்னும் சொல்லின் பேச்சுவழக்கு
(A) வேர்குறு
(B) வேர்க்குறு
(✔) வேர்வை
(D) வியர்வை
(E) விடை தெரியவில்லை
69.
காகத்திற்கு உரிய மற்றொரு பெயர்
(A) புட்டில்
(B) புட்டி
(C) புட்டம்
(✔) புட்டகம்
(E) விடை தெரியவில்லை
70.
அன்புக்குரியவரின் துன்பம் கண்டு பெருகும் கண்ணீர் ___________ என்றழைப்பர்.
(A) புண்கணீர்
(B) புங்கணீர்
(C) புயங்கணீர்
(✔) புன்கணீர்
(E) விடை தெரியவில்லை
71.
"இரவில் மாட்டிய இலங்குசுடர் நெகிழி உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும் துறை...," - இச்சங்கச் செய்யுளை இயற்றிய ஆசிரியரைக் கண்டறிக.
(A) உறையூர் முதுகொற்றனார்
(B) உறையூர் முதுகூற்றனார்
(✔) உருத்திரங்கண்ணனார்
(D) உறையூர் இளம்பொன் வாணிகனார்
(E) விடை தெரியவில்லை
72.
BLOGGER-பொருத்தமான தமிழ்ச் சொல்லைத் தேர்க.
(A) வலையொளி
(✔) வலைப்பதிவர்
(C) காணொளி படைப்பாளர்
(D) தள வமைப்பாளர்
(E) விடை தெரியவில்லை
73.
பிறமொழிச் சொல்லைத் தேர்ந்தெடு
(A) நிகழ்வு
(B) வெளியீடு
(✔) வாடகை
(D) ஒழுங்கு
(E) விடை தெரியவில்லை
74.
உறுதிக் கூற்று : ஆ, ஓ, எ, ஏ, யா ஆகிய எழுத்துகள் சொற்களோடு சேர்ந்து வரும் இடங்களில் வினாக்குறி இட வேண்டும்.
காரணம் : ஏனெனில் இவை வினாச்சொற்கள்.
(✔) உறுதிக்கூற்று சரி காரணம் சரி
(B) உறுதிக்கூற்று சரியன்று காரணம் சரி
(C) உறுதிக்கூற்று சரி காரணம் சரியன்று
(D) உறுதிக்கூற்று, காரணம் இரண்டும் சரியன்று
(E) விடை தெரியவில்லை
75.
பிறைக் குறியை உள்ளடக்கப் பயன்படும் நிறுத்தற்குறியீடு எது?
(A) விடுகுறி
(B) உடுக்குறி
(C) மேற்கோள் குறி
(✔) பகர அடைப்புக் குறி
(E) விடை தெரியவில்லை
76.
தேவநேயப்பாவாணர் 'கூட்டுக்கிளவியப் புணர் வாக்கியம்' என்று எதனைக் கூறுகிறார்?
(A) மாறுபட்ட தலைகளை
(B) ஒரு எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடிதலை
(C) சொற்பொருள் கூறுமிடத்து
(D) ஒப்புமைப்படுத்துதலை
(E) விடை தெரியவில்லை
77.
கீழ்க்கண்டவற்றுள் தவறான ஒன்றைத் தேர்வு செய்யவும்.
(1) அன்பு இருப்பது தான் உயிருள்ள உடல்
(2) அன்பு இல்லாதது உயிரற்ற உடல்
(3) அன்பு உடையவர்கள் தம் உடலும் பிறர்க்கே என்பர்
(4) அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளும் தமக்கே என்பர்
(A) (1) மட்டும்
(B) (2) மட்டும்
(C) (3) மட்டும்
(D) (4) மட்டும்
(E) விடை தெரியவில்லை
78.
“அன்றே யொழிய விடல்” என வள்ளுவர் எதனைக் குறிப்பிடுகின்றார்?
(A) அன்றறிவாம் என்னா தறம்
(B) வினை பகை யென்றிரண்டின் எச்சம்
(✔) நடுநிலை கடந்து உண்டாகும் செல்வம்
(D) முடிவும் இடையூறும் அறிந்த செயல்
(E) விடை தெரியவில்லை
79.
கிளைஞரை அடக்கும் கோல் எது?
(✔) நமக்கு வரும் துன்பம்
(B) இடுக்கண் களையும் நட்பு
(C) நட்பாங் கிழமை
(D) கீழ்ந்திடா நட்பு
(E) விடை தெரியவில்லை
80.
பின்வரும் பழமொழி உணர்த்திடும் சரியானவற்றைக் குறிப்பிடுக.
“எரு கெட்டாருக்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளை தாய்க்கும் எட்டே கடுக்காய்”.
(a) இப்பழமொழி வேளாண்மை சார்ந்தது.
(b) எரு கெட்டார் என்பது மலச்சிக்கல் கொண்டவர்களை குறிக்கிறது.
(c) கடுக்காய் மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்து.
(d) பிள்ளை பெற்ற தாய்க்கும் பயன்படும்.
(A) (b), (c), (d) - சரி
(B) (a), (b), (c) - சரி
(C) அனைத்தும் சரி
(✔) அனைத்தும் தவறு
(E) விடை தெரியவில்லை
81.
வெற்றி, வீரம், வலி ஆகிய பொருள்களைத் தரும் சொல்
(✔) விறல்
(B) வென்றி
(C) விரல்
(D) வறம்
(E) விடை தெரியவில்லை
82.
பிரித்து எழுதுக:
"வேணன்மை” என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
(A) வேணன் + மை
(B) வேண் + அன்மை
(C) வேண் + நன்மை
(✔) வேள் + நன்மை
(E) விடை தெரியவில்லை
83.
சேர்த்து எழுதுக :
"அது + அன்று” என்னும் சொல்லைச் சேர்த்து எழுதுக.
(✔) அதுவன்று
(C) அஃதன்று
(B) அதுஅன்று
(D) அதான்று
(E) விடை தெரியவில்லை
84.
சேர்த்து எழுதுக :
உள் + மனம்
(A) உண்மனம்
(✔) உள்மனம்
(B) உண்மனம்
(D) உம்மனம்
(E) விடை தெரியவில்லை
85.
'இடியோசை கேட்ட நாகம்போல'-என்ற உவமைத்தொடர் உணர்த்தும் பொருளைத் தேர்ந்தெடுக்க :
(A) வன்மம்
(B) ஏக்கம்
(C) மிரட்சி
(✔) திரட்சி
(E) விடை தெரியவில்லை
86.
நீறு பூத்த நெருப்புப்போல - நீறு என்பதன் பொருள் என்ன?
(A) சாம்பல்
(B) மண்
(✔) நீறு
(D) கவசம்
(E) விடை தெரியவில்லை
87.
'அடவி' என்ற சொல்லின் பொருள்
(A) ஆறு
(✔) பக்கம்
(C) காடு
(D) நிலம்
(E) விடை தெரியவில்லை
88.
பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின். (குறள்-559)
இக்குறட்பாவில் “மிகுதி” என்னும் பொருளை உணர்த்தும் சொல்லைக் கண்டறிக.
(A) பரியது
(✔) கூர்
(C) கோட்ட
(D) யானை
(E) விடை தெரியவில்லை
89.
கூற்று [A] : திருப்புகழில் அருணகிரிநாதர் தப்பாட்ட இசை குறித்துப் பதிவு செய்துள்ளார்.
காரணம் [R] : புலியைப் போன்று கருப்பும் மஞ்சளுமான வண்ணக் கோடுகளிட்டு, வீரத்தைக் காட்டி தப்பு இசைக்கேற்பத் தப்பாட்டத்தை ஆடுவர்.
(A) கூற்று [A] சரி; காரணம் [R] தவறு, [R] என்பது [A] இன் சரியான விளக்கம் அல்ல
(✔) கூற்று [A] சரி ; காரணம் [R] சரி, [R] என்பது [A] இன் சரியான விளக்கம்
(C) கூற்று [A] தவறு ; காரணம் [R] தவறு
(D) கூற்று [A] தவறு ; காரணம் [R] சரி
(E) விடை தெரியவில்லை
90.
கீழ்க்கண்டவற்றுள் சரியானவற்றைத் தேர்வு செய்க.
தென் திராவிட மொழிகள்
(1) தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம்
(2) தமிழ், கன்னடம், மலையாளம், குடகு
(3) தமிழ், மலையாளம், குடகு, கூயி
(4) தமிழ், குடகு, கூயி, குரூக்
(A) (1) மட்டும்
(✔) (2) மட்டும்
(C) (3) மட்டும்
(D) (4) மட்டும்
(E) விடை தெரியவில்லை
91.
'Presbyoesophagus' எனும் கலைச்சொல்லுக்கு இணையான சொல்லைக் கண்டறிக.
(A) முதியோரின் கேளா நிலை
(✔) உணவுக்குழல் தளர்ச்சி அடைதல்
(C) வெள்ளெழுத்து முதிர்வு அடைதல்
(D) மார்சளிக் காய்ச்சல்
(E) விடை தெரியவில்லை
92.
வணிக மேலாண்மை குறித்த ஆங்கிலச் சொற்களைத் தமிழ்க் கலைச்சொற்களோடு பொருத்துக :
| (a) Barter | 1. வாராக் கடன் |
|---|---|
| (b) Bargaining | 2. பண்டமாற்று |
| (c) Bad debt | 3. கைப்பற்றப்பட்ட நிறுவனம் |
| (d) Acquiree | 4. பேரம் பேசுதல் |
(a) (b) (c) (d)
(A) 3 4 1 2
(B) 3 1 2 4
(✔) 2 4 1 3
(D) 2 1 4 3
(E) விடை தெரியவில்லை
93.
பொருத்துக :
| (a) அநுராகம் | 1. பாவம் |
|---|---|
| (b) அனுராகம் | 2. மான் |
| (c) ஏணம் | 3. ஒத்தகாதல் |
| (d) ஏனம் | 4. மிக்க ஆசை |
(a) (b) (c) (d)
(✔) 4 3 2 1
(B) 4 1 2 3
(C) 4 2 3 1
(D) 4 1 3 2
(E) விடை தெரியவில்லை
94.
“அப்பாவி” எனும் சொல் பிழை எனில், அச்சொல்லின் திருத்தச் சொல்லைக் காண்க.
(A) அடப்பாவி
(B) அற்பாவி
(C) அற்பம் ஆவி
(✔) அற்ப ஆவி
(E) விடை தெரியவில்லை
95.
பொருளறிந்து பொருத்துக :
| (a) ஓதுதல் | 1. திருத்தமாகச் சொல்லுதல் |
|---|---|
| (b) மொழிதல் | 2. பலர் அறியச் சொல்லுதல் |
| (c) விளம்புதல் | 3. காதில் மெல்லச் சொல்லுதல் |
| (d) உளறுதல் | 4. ஒன்றுக்கொன்று சொல்லுதல் |
(a) (b) (c) (d)
(A) 1 2 3 4
(B) 4 3 2 1
(✔) 3 4 1 2
(D) 3 1 2 4
(E) விடை தெரியவில்லை
96.
பழமொழியை நிறைவு செய்க :
“மாலைசுற்றிப் பிறந்த பிள்ளை ___________ ஆகாது”.
(A) அம்மாவிற்கு
(B) தாத்தாவிற்கு
(C) தங்கைக்கு
(✔) மாமனுக்கு
(E) விடை தெரியவில்லை
97.
திருமால் குன்றம் உயர்ந்தோங்கி நிற்கின்றது - இத்தொடரின் ஒருபொருட் பன்மொழி.
(A) திருமால் குன்றம்
(✔) உயர்ந்து ஓங்கிய
(C) ஓங்கி நிற்கும்
(D) குன்றம் உயர்ந்து
(E) விடை தெரியவில்லை
98.
இருபொருள் குறிக்கும் சொற்களை பொருத்துக :
| (a) கறுத்து | 1. கொல்லல், கோளிழைத்தல் |
|---|---|
| (b) கிராய் | 2. கோபித்து, சினந்து |
| (c) கோறல் | 3. பிணக்கு, மாறுபாடு |
| (d) உறையல் | 4. கருஞ்சேற்று நிலம், புற்கரடு |
(a) (b) (c) (d)
(A) 3 1 2 4
(B) 3 4 1 2
(C) 2 1 4 3
(✔) 2 4 1 3
(E) விடை தெரியவில்லை
99.
கண்ணதாசன் குறித்த பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றைத் தேர்ந்தெடு :
(i) 1949 ஆம் ஆண்டு கலங்காதிரு மனமே என்ற பாடலை எழுதித் திரைப்படம் பாடலாசிரியரானார்.
(ii) இயேசு காவியம் என்னும் நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
(iii) இவர் கவியரசு என்னும் சிறப்புப் பெயராலும் அழைக்கப்படுகிறார்.
(A) (ii) மற்றும் (iii) மட்டும்
(B) (iii) மட்டும்
(C) (i) மற்றும் (ii) மட்டும்
(✔) (i) மற்றும் (iii) மட்டும்
(E) விடை தெரியவில்லை
100.
வேலுநாச்சியார் கற்றறிந்த மொழிகளைக் கண்டறிக :
(✔) தமிழ், ஆங்கிலம், உருது, பிரெஞ்சு
(B) தமிழ், ஆங்கிலம், இந்தி, கிரேக்கம்
(C) தமிழ், ஆங்கிலம், உருது, சீனம்
(D) தமிழ், ஆங்கிலம், உருது, மலையாளம்
(E) விடை தெரியவில்லை
Joining Veranda RACE, I started as a beginner to prepare for the TNPSC Group 2A exam. My faculty and mentors taught me all the topics from the syllabus. Their TNPSC books and study materials are top notch and will be useful for your TNPSC preparation. Their regular mock tests for the TNPSC Group 2A exams were crucial in my success.
Veranda RACE was the first choice when I decided to prepare for TNPSC Group 2 Exam. I cleared the exam in my first attempt itself. Thanks to Veranda RACE faculty and mentors. I used to prepare in Veranda RACE library for more than 8 hours daily. I’m happy that I made my parents very proud.
Preparing for the TNPSC Group IV Exam, I am happy that I chose Veranda RACE. All their TNPSC faculty are experienced and mentors are available for doubt clarification anytime. I attended TNPSC Group 4 mock tests daily. Thanks to Veranda RACE! I’m the first Tamil Nadu Government Employee in my family!
Coming from a village in Tirunelveli, Veranda RACE TNPSC faculty taught me all the basics from the beginning. I attended regular mock tests, used their TNPSC books and library to the maximum. My success is not possible without my mentors. I thank them for motivating me for the exam!
Joining Veranda RACE, I started as a beginner to prepare for the TNPSC Group 2A exam. My faculty and mentors taught me all the topics from the syllabus. Their TNPSC books and study materials are top notch and will be useful for your TNPSC preparation. Their regular mock tests for the TNPSC Group 2A exams were crucial in my success.
Veranda RACE was the first choice when I decided to prepare for TNPSC Group 2 Exam. I cleared the exam in my first attempt itself. Thanks to Veranda RACE faculty and mentors. I used to prepare in Veranda RACE library for more than 8 hours daily. I’m happy that I made my parents very proud.
Preparing for the TNPSC Group IV Exam, I am happy that I chose Veranda RACE. All their TNPSC faculty are experienced and mentors are available for doubt clarification anytime. I attended TNPSC Group 4 mock tests daily. Thanks to Veranda RACE! I’m the first Tamil Nadu Government Employee in my family!
Coming from a village in Tirunelveli, Veranda RACE TNPSC faculty taught me all the basics from the beginning. I attended regular mock tests, used their TNPSC books and library to the maximum. My success is not possible without my mentors. I thank them for motivating me for the exam!