
தமிழ்நாடு மின்வாரியத்தில் 8,000 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நியமனங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தேர்வு மூலம் நேரடியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் Veranda RACE கட்டுரையில் TNEB Field Assistant Recruitment தமிழ்நாடு அரசாணையின் முக்கிய அம்சங்களையும், கடந்த ஆண்டு நடைபெற்ற Field Assistant தேர்வு, கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை, உடற்தகுதித் தேர்வு ஆகிய விவரங்களையும் தெளிவாகத் தொகுத்து வழங்குகிறது.

தமிழ்நாடு மின் வாரியத்தில் (TNEB) உள்ள 8,000 கள உதவியாளர் காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசு 29 அக்டோபர் 2026 அன்று அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் (TANGEDCO) உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகளை எழுந்து வந்தன. இந்த சூழலில், தற்போது இரண்டு ஆண்டில் 8,000 மின்வாரிய கள உதவியாளர் (TNEB Field Assistant) காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த கள உதவியாளர் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நேரடி நியமனம் செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழ்நாடு எரிசக்தித் துறை (B2) 28 அக்டோபர் 2026 அன்று வெளியிட்டுள்ளது. இந்த அரசாணை எண் 126-ன்படி, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அளித்த கோரிக்கையைப் பரிசீலித்த தமிழ்நாடு அரசு, இந்த நியமனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இப்பணியிடங்களுக்கு ஐ.டி.ஐ. (ITI) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். இதர தகுதிகள் மற்றும் விவரங்கள் TNPSC தேர்வாணைய அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிடப்படும்.
இந்த 8,000 காலிப்பணியிடங்களுக்கு ஒரே நேரத்தில் நிரப்பப்படப்போவதில்லை. அரசின் அரசாணையின்படி இந்த கள உதவியாளர் பணி நியமனம் இரண்டு கட்டங்களாக நடைபெறும்.
2027ஆம் ஆண்டில் 5,000 பணியிடங்கள் மற்றும் 2028ஆம் ஆண்டில் 3,000 பணியிடங்கள் என இரண்டு கட்டங்களாக மொத்தம் 8,000 கள உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
ஆண்டு | நிரப்பப்படும் பணியிடங்கள் |
2027 | 5,000 |
2028 | 3,000 |
மொத்த பணியிடங்கள் | 8,000 |
2026 ஆண்டில் டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்படும் தேர்வு அறிவிப்புகள் முடிவடைந்த நிலையில், அடுத்த ஆண்டு (2027) நடத்தப்படவுள்ள தேர்வுகளுக்கான உத்தேச தேர்வு கால அட்டவணை (TNPSC Annual Planner 2027) விரைவில் வெளியிடப்படவுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு மின்சாரத்துறை கள உதவியாளர் பணியிடங்கள் சேர்த்து தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு தமிழ்நாடு இளைஞர்களிடையே பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையை படிக்க இங்கே கிளிக் செய்ய்யவும்:
TNEB TNPDCL Field Assistant Recruitment for 2027 and 2028 Press Release PDF - Click to Download
கடந்த 2025 ஆண்டில், TNPSC தேர்வாணையம் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் (TNPDCL) கள உதவியாளர் பணிக்கு 1,794 காலிப்பணியிடங்களை நிரப்பும் தேர்வை நடத்தியது.
இது ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் (ITI நிலை) – II தேர்வு (TNPSC Combined Technical Services ITI Level II Notification 2025) அறிவிக்கை 2025-ன் கீழ், விளம்பர எண் 717 மூலம் 3 செப்டம்பர் 2025 அன்று வெளியிடப்பட்டது.
இப்பணிகளுக்கான எழுத்துத் தேர்வு 16 நவம்பர் 2025 அன்று நடைபெற்றது. 2025-ல் 1,794 காலிப்பணியிடங்கள் வெளியான நிலையில், 2027–28-ல் வரவிருக்கும் 8,000 கள பணியாளர் காலிப்பணியிடங்கள் அதைவிடச் சுமார் நான்கரை மடங்கு அதிகம்.
தமிழ்நாடு மின்வாரியத்தில் கள உதவியாளர் (TNEB Field Assistant) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 18 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும்.
பிரிவு | அதிகபட்ச வயது |
பொதுப் பிரிவு (Others) | 32 |
BC (OBCM), BCM, MBC/DC | 34 |
SC, SC(A), ST | 37 |
பிரிவு | பொதுப் பிரிவு | BC (OBCM), BCM, MBC/DC | SC, SC(A), ST |
மாற்றுத்திறனாளிகள் | 42 | 44 | 47 |
முன்னாள் படைவீரர்கள் | 50 | 55 | 55 |
கணவனை இழந்த ஆதரவற்ற பெண்கள் | 37 | 37 | 37 |
முக்கியக் குறிப்பு: BC (OBCM), BCM, MBC/DC, SC, SC(A), ST பிரிவினருக்கும் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும், குறைந்தபட்சப் பொதுக் கல்வித் தகுதியைவிட உயர்ந்த கல்வித் தகுதி இருந்தால் அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
NCVT வழங்கும் தேசிய தொழிற்சான்றிதழ் (NTC) அல்லது தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் (NAC) தேவை.
அது எலக்ட்ரீஷியன், வயர்மேன் அல்லது சிறப்புச் சிறப்பு மையத் திட்டத்தின் (Centre of Excellence) கீழ் மின்சாரத் தொழிற்பிரிவு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் இருக்க வேண்டும்.
தமிழ்நாடு மின் வாரியத்தில் கள உதவியாளர் பதவிக்கு TNPSC தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ₹18,800 முதல் ₹59,900 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த கள உதவியாளர் பணி, தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்தில் Level 2 நிரந்தர அரசு வேலை ஆகும்.
நிலை-2 (Level 2) ஊதிய விகிதம்: ரூ.18,800 முதல் ரூ.59,900 வரை (CPS)
சம்பள விவரங்கள் | தொகை |
|---|---|
அடிப்படை ஊதிய விகிதம் | ₹18,800 – ₹59,900 |
அகவிலைப்படி (DA) | ₹11,280 |
வீட்டு வாடகைப்படி (HRA) | ₹1,800 |
நகர ஈட்டுப்படி (CCA) | ₹360 |
மருத்துவப்படி | ₹300 |
நிறுவனத்தின் CPS பங்களிப்பு | ₹3,008 |
மதிப்பிடப்பட்ட மாதாந்திர பணியாளர் செலவு | ₹35,548 |
TNEB கள உதவியாளர் பணி தேர்விற்கான விண்ணப்பதார்கள் எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
தாள் | பகுதி | தரம் | வினாக்கள் | அதிகபட்ச மதிப்பெண் | நேரம் |
தாள் I | பகுதி A: தமிழ்த் தகுதித் தேர்வு | SSLC | 100 | 150 | 3 மணி நேரம் |
பகுதி B: பொதுஅறிவு (General Studies) | SSLC | 75 | 150 | ||
பகுதி C: திறனறிவு மற்றும் மனத்திறன் | SSLC | 25 | |||
தாள் II | தொழிற்பிரிவுத் தாள் | ITI | 200 | 300 | 3 மணி நேரம் |
தாள் II-க்கான பாடக் குறியீடு 590: எலக்ட்ரீஷியன் மற்றும் வயர்மேன் தொழிற்பிரிவு.
தாள் II வினாத்தாள் ஆங்கிலத்திலும் தமிழிலும் இருக்கும்.
தாள் I-ன் பகுதி B & C வினாக்களும் இரு மொழிகளில் அமையும். இறுதித் தேர்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும் மொத்த மதிப்பெண் 450 (தாள் I-ன் பகுதி B & C + தாள் II).
தேர்வுப் பகுதி | SC, SC(A), ST, MBC/DC, BC (OBCM), BCM | மற்றவர்கள் |
தாள் I – பகுதி A (தமிழ்த் தகுதித் தேர்வு) | 60 | 60 |
பகுதி B, C (தாள் I) + தாள் II சேர்த்து (450-க்கு) | 135 | 180 |
முக்கிய விதி: தாள் I-ன் பகுதி A-வில் குறைந்தபட்சம் 40% (60 மதிப்பெண்) பெறுபவர்களுக்கு மட்டுமே தாள் II மற்றும் தாள் I-ன் பகுதி B, C விடைத்தாள்கள் மதிப்பிடப்படும்.