TNPSC Group 4 தேர்வு 2025: விண்ணப்பிக்க கடைசி நாள், 3935 காலிப் பணியிடங்கள் - ஆன்லைனில் விண்ணபிக்க நேரடி லிங்க்

Share

TNPSC Group 4 தேர்வு 2025: விண்ணப்பிக்க கடைசி நாள், 3935 காலிப் பணியிடங்கள் - ஆன்லைனில் விண்ணபிக்க நேரடி லிங்க்

TNPSC Group 4 Exam 2025-க்கு TNPSC இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க 24 May 2025 அன்றே கடைசி நாள். இந்த தேர்வில் 3935 Group 4 காலிப் பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அண்மையில் வெளியிடப்பட்டது.

TNPSC Group 4 Exam 2025

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், இளநிலை வருவாய் ஆய்வாளர், தட்டச்சர், உதவியாளர், வனக்காப்பாளர், வனக்காவலர் போன்ற 3935 குரூப் 4 பணியிடங்களுக்கான TNPSC Group 4 Exam 2025 அதிகாரபூர்வ அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 25 ஏப்ரல் 2025 அன்று அதன் இணையதளத்தில் வெளியிட்டது.

A green and yellow sign with a logo and text

AI-generated content may be incorrect.

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிய விரும்பும் தேர்வர்கள் இந்த TNPSC Group 4 Exam 2025-க்கு 25 ஏப்ரல் 2025 முதல் ஆன்லைன் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

TNPSC Group 4 Exam 2025 முக்கியமான நாட்கள்:

இந்த TNPSC Group 4 Exam 2025-க்கு தயாராகும் ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் இத்தேர்வின் முக்கிய நாட்களை கீழே காணலாம்:

TNPSC Group 4 Exam 2025: முக்கிய தேதிகள்

நிகழ்வு

தேதி

TNPSC Group 4 Exam 2025 அறிவிப்பு வெளியான தேதி

25 ஏப்ரல் 2025

TNPSC Group 4 Exam 2025 ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி

25 ஏப்ரல் 2025

TNPSC Group 4 Exam 2025 விண்ணப்பிக்க கடைசி தேதி

24 மே 2025

TNPSC Group 4 Exam 2025 ஆன்லைன் கட்டணம் செலுத்து கடைசி தேதி

24 மே 2025

TNPSC Group 4 Exam 2025 விண்ணப்பத் திருத்தச் சாளர காலம்

29 மே 2025 முதல் 31 மே 2025

TNPSC Group 4 Exam 2025 தேர்வு நாள்

12 ஜூலை 2025 (காலை 9.30 முதல் மதியம் 12.30 வரை)

TNPSC Group 4 Exam 2025: எப்படி விண்ணப்பிப்பது?

இந்த TNPSC Group 4 Exam 2025 தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் http://www.tnpscexams.in/ என்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைன் வழி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தேர்வர்கள் TNPSC இணையதளத்தில் உள்ள ஒருமுறைப் பதிவு தளத்தில் (One Time Registration / OTR) பதிவு செய்த பின்பு TNPSC Group 4 Exam 2025-க்கான இணைய வழி விண்ணப்பத்தினை நிரப்ப வேண்டும்.

தேர்வர்கள் OTR ஏற்கனவே பதிவு செய்து இருந்தால், அவர்கள் TNPSC Group 4 Exam 2025-க்கான இணைய வழி விண்ணப்பத்தினை நேரடியாக பூர்த்தி செய்ய தொடங்கலாம்.

TNPSC Group 4 Exam 2025 தேர்விற்கு 25 ஏப்ரல் 2025 முதல் தேர்வர்கள் விண்ணப்பிக்க தொடங்கலாம். இந்த டி.என்.பி.எஸ்சி குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பதாரர்கள் 24 மே 2025 தேதி வரை ஆன்லைன் வாயிலாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

A green and white poster with a clock and text

AI-generated content may be incorrect.

இணையவழி விண்ணப்பத் திருத்த சாளரம் 29 மே 2025 முதல் 31 மே 2025 வரை தேர்வர்கள் இணையவழி விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை திருத்தம் செய்யலாம்.

இந்த TNPSC Group 4 Exam 2025 தேர்விற்கு நேரடியாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இங்க க்ளிக் செய்யவும்:

TNPSC Group 4 Exam 2025 Official Recruitment – Direct Link to Apply – Click Here

TNPSC Group 4 Exam 2025: காலிப்பணியிடங்கள்

மொத்தம் 3935 குரூப் 4 காலிப் பணியிடங்கள் TNPSC Group 4 Exam 2025 அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த TNPSC Group 4 Exam 2025-ல் உள்ள குரூப் 4 பதவிகள், அதன் துறைகள், காலிப்பணியிட எண்ணிக்கை, ஊதிய நிலை ஆகிய விவரங்கள் TNPSC Group 4 Exam 2025 Official Notification-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC Group 4 Exam 2025 தேர்வுக்குத் தயாராகும் ஆர்வமுள்ள தேர்வர்கள், TNPSC Group 4 Exam 2025 Official Notification-ல் வெளியிடப்பட்ட விரிவான காலிப்பணியிட விவரங்களை இங்கே காணலாம்.

பதவியின் பெயர்

பதவிக் குறியீடு

பணி / நிறுவனத்தின் பெயர்

காலிப் பணியிடஎண்ணிக்கை

கிராம நிர்வாக அலுவலர்

2025

தமிழ்நாடு அமைச்சுப் பணி

215

இளநிலை உதவியாளர் (பிணையமற்றது)

2600

தமிழ்நாடு அமைச்சுப் பணி / நீதி அமைச்சுப் பணி

1621

இளநிலை உதவியாளர்

3512

தமிழ்நாடு அதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்

6

3496

தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம்

5

இளநிலை உதவியாளர் (பிணையம்)

2400

தமிழ்நாடு அமைச்சுப் பணி

46

இளநிலை வருவாய் ஆய்வாளர்

3670

தமிழ்நாடு அமைச்சுப் பணி

239

இளநிலை செயல் பணியாளர் (அலுவலகம்)

3296

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம்

1

இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர்

3667

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம்

1

3522

சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம்

1

தட்டச்சர்

2200

தமிழ்நாடு அமைச்சுப் பணி / நீதி அமைச்சுப் பணி / தலைமைச் செயலகப் பணி / சட்டமன்ற பேரவை செயலகப் பணி

1099

3668

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம்

1

சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை - III)

2300

தமிழ்நாடு அமைச்சுப் பணி / நீதி அமைச்சுப் பணி

335

3669

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம்

2

3671

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்

4

3666

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்

17

நேர்முக எழுத்தர்

3673

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

2

உதவியாளர்

3293

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்

54

கள உதவியாளர்

3255

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்

19

வனக்காப்பாளர்

3317

தமிழ்நாடு வனச் சார்நிலை பணி

62

ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர்

3318

தமிழ்நாடு வனச் சார்நிலை பணி

35

க்காவலர்

3319

தமிழ்நாடு வனச் சார்நிலை பணி

71

க்காவலர் (பழங்குடியின இளைஞர்)

3320

தமிழ்நாடு வனச் சார்நிலை பணி

24

வனக்காப்பாளர்

3494

தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம்

`15

க்காவலர்

3495

தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம்

50

TNPSC Group 4 Exam 2025: வயது வரம்பு



TNPSC Group 4 Exam 2025 Official Notification-ல் எல்லா காலிப்பணியிடங்களுக்கான பதவிகளுக்கு குறைந்தபட்ச வயது மற்றும் உச்ச வயது வரம்பு ஆகியவை வெளியிடப்பட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் 42 வயது வரை இருக்க வேண்டும். வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர், வனக் காவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் 37 வயது வரை இருக்கலாம். இதர பதவிகளுக்கு 18 வயது முதல் 34 வயது வரை இருக்கலாம். இப்பதவிகளுக்கு வயது வரம்பில் தளர்வு உள்ளது.

TNPSC Group 4 Exam 2025 தேர்விற்கான வயது வரம்புக்கான தகுதி நிர்ணயிக்கும் கடைசி தேதி 1 ஜூலை 2025 என்று TNPSC Group 4 Exam 2025 அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC Group 4 Exam 2025: கல்வித்தகுதி

இந்த TNPSC Group 4 Exam 2025-க்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் குறைந்தபட்ச பொதுக் கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இளநிலை உதவியாளர் போன்ற பதவிகளுக்கு பட்டப்படிப்பு கட்டாயம் ஆகும்; இது போன்ற பதவிகளுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருப்பது அவசியமாகும். தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அதன் தொடர்புடைய தொழில்நுட்பத் தேர்வையும் கடந்து இருக்க வேண்டும்.

வனக் காப்பாளர் பதவிக்கு குறைந்தபட்சமாக பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேல்நிலை கல்வியில் இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல் அல்லது தாவரவியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு படத்தை படித்து தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். வனக் காவலர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதுமானது.

TNPSC Group 4 Exam 2025: தேர்வு செய்யப்படும் முறை

TNPSC Group 4 Exam 2025 தேர்வு ஒரே கட்டமாக நடைபெறும். தேர்வு முடிந்ததும், கட்-ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வானவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்படும். அந்தப் பட்டியலில் இடம் பெறுபவர்களுக்கு, தங்களுடைய சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். இதைத் தொடர்ந்து, நேரில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைமுறைகள் நடைபெறும். இவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் மற்றும் அவர்களுக்கு வேலை நியமனம் வழங்கப்படும்.

TNPSC Group 4 Exam 2025 தேர்வு மூன்று பகுதிகளை உள்ளடக்கியது.

பகுதி - தமிழ் தகுதி & மதிப்பீட்டுத் தேர்வு - 100 கேள்விகள்

பகுதி - பொது அறிவு - 75 கேள்விகள்

பகுதி - திறனறிவு & மனக்கணக்கு நுண்ணறிவு - 25 கேள்விகள்

இத்தேர்வு மொத்தம் 3 மணி நேரம் நடைபெறும். இத்தேர்வு கொள்குறி வகையிலான கேள்விகளுடன் OMR தேர்வு முறையில் நடைபெறும்.

பகுதி

பாடம்

வினாக்களின் எண்ணிக்கை

அதிகபட்ச மதிப்பெண்கள்

நேரம்

பகுதி

தமிழ் தகுதி & மதிப்பீட்டுத் தேர்வு

100

150

3 மணி நேரம்

பகுதி

பொது அறிவு

75

150

பகுதி

திறனறிவு & மனக்கணக்கு நுண்ணறிவு

25

TNPSC Group 4 Exam 2025 Official Notification PDF தமிழில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்:

TNPSC Group 4 Exam 2025 Official Notification (Tamil) – 3935 Vacancies – Download PDF Here

To read the TNPSC Group 4 Exam 2025 Official Notification in English, click here to download:

TNPSC Group 4 Exam 2025 Official Notification (English) – 3935 Vacancies – Download PDF Here

TNPSC Group 4 Exam 2025: தேர்வு தேதி

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு அதிகாரபூர்வ அறிவிப்பாணை மூலம் வெளியிடப்பட்ட 3,935 குரூப் 4 காலிப்பணியிடங்களுக்கான TNPSC Group 4 Exam 2025 தேர்வு 12 ஜூலை 2025 தேதி தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்வு மையங்களில் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இத்தேர்வு நடைபெறும்.

TNPSC Group 4 Exam 2025: Veranda RACE Offline & Online Courses

TNPSC Group 4 Exam 2025 தேர்வு குறித்து உடனுக்குடன் அதிகாரபூர்வ தேர்வு தகவல்கள் Veranda RACE இணையதளத்தில் பதிவேற்றப்படும். மேலும், நீங்கள் TNPSC தேர்வுகளுக்கு தயாராகும் விண்ணப்பதாரர்கள், வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு முழுமையாக படித்து தயாராக, Veranda RACE-ன் TNPSC தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் குறித்து அறிந்துகொள்ள கீழ உள்ள லிங்க் காணவும்:

Veranda RACE’s TNPSC Group 4 Live Online Classes 2025 – Click here

Veranda RACE’s TNPSC Group 4 Offline Classes 2025 – Click here

Veranda RACE’s Residential Coaching Courses 2025 – Click here

Veranda RACE-ல் திறமையான மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு வகுப்பறை (Classroom Offline) மற்றும் இணையவழி (LIVE Online) ஆகிய முறைகளில் தினசரி வகுப்புகள் நடைபெறுகின்றன. எங்களிடம் படித்த 45,000+ மேற்பட்ட Veranda RACE மாணவர்கள் இன்று வங்கி, மத்திய, மாநில & ரயில்வே துறை அதிகாரிகளாக வேலை பெற்றுள்ளார். 13+ வருடங்களுக்கு மேலாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களில் 40+ மேற்பட்ட கிளைகளை கொண்டு Bank SSC TNPSC TNUSRB Railways போன்ற போட்டி தேர்வுகளுக்கு தரமான பயிற்சியை அளித்து கொண்டு உள்ளோம். அது போலவே, இணைய வழி பயிற்சி வழியே LIVE Online Classes கொண்டு தரமான பயிற்சியையும் வழங்கி வருகிறோம்!

போட்டி தேர்வு பயிற்சி பற்றி மேலும் அறிந்துகொள்ள Veranda RACE இணையதளத்தை அணுகவும்.

Veranda RACE – Best Bank, SSC, TNPSC, TNUSRB SI/PC Police & Railways Coaching - Official Website

FAQs

The last date to apply is May 24, 2025.

Veranda RACE’s TNPSC Triumphants