TNUSRB SI

    TNUSRB SIதேர்வு 2025அறிவிப்புவெளியானது: 1,299 SIகாலிப்பணியிடங்கள் தமிழ்நாடுசீருடைப்பணியாளர்தேர்வுவாரியம்அறிவிப்பு

    தமிழ்நாட்டில்காலியாக உள்ள காவல் சார்புஆய்வாளர் (Sub Inspector of Police) பணியிடங்களைநிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலை அறிவிப்பை தமிழ்நாடுசீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (Tamil) 4 ஏப்ரல் 2025 அன்று அதன் இணையதளத்தில் வெளியிட்டது.

    அதன்படி, காவல் சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா) மற்றும் காவல் சார்பு ஆய்வாளர்கள் (ஆயுதப்படை) ஆகியபதவிகளுக்கு நேரடி தேர்விற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் பதிவு வரும் 7 ஏப்ரல் 2025 முதல் தொடங்குகிறது. மொத்தம் 1,299 காவல் சார்பு ஆய்வாளர் காலிப்பணியிடங்கள் இந்த தேர்வு மூலம்நிரப்பப்பட உள்ளது.

    TNUSRB SI தேர்வு 2025 அறிவிப்பு

    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆண்டுதோறும் நடத்தும் TNUSRB SI தேர்வின் மூலமாக நிரப்பப்படும் சப் இன்ஸ்பெக்டர் (தாலுகா) மற்றும் சப் இன்ஸ்பெக்டர் (ஆயுதப்படை) ஆகிய பதவிகளுக்கு 2025-ம் ஆண்டுக்கான நேரடி தேர்வு அறிவிப்பு 4 ஏப்ரல் 2025 அன்று TNUSRB அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியானது.

    மொத்தம் 1,299 காவல் சப் இன்ஸ்பெக்டர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களுக்கு இந்த TNUSRB SI Exam 2025 நடைபெற உள்ளது.

    இத்தேர்விற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள தேர்வர்கள் ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

    இந்த தேர்விற்கான ஆன்லைன் வழி தேர்வு விண்ணப்பங்கள் வரும் 7 ஏப்ரல் 2025 தேதி முதல் தொடங்குகிறது. தேர்வர்கள் இந்த தேர்விற்கு வரும் 3 மே 2025 வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

    TNUSRB SI Exam 2025 – Official Notification PDF Download – Veranda RACE

    சப்இன்ஸ்பெக்டர்காலிப்பணியிடங்கள்

    மொத்தம் 1,299 TNUSRB சப் இன்ஸ்பெக்டர் (Sub Inspector) பணியிடங்கள் TNUSRB SI தேர்வு 2025 அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த TNUSRB SI தேர்வு 2025 அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ஆண் மற்றும் பெண்தேர்வர்களுக்கான மொத்த காலிப்பணியிடங்கள் விபரமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு காவல்துறை துணைப் பணிப்பிரிவு கீழ், சப் இன்ஸ்பெக்டர் (தாலுகா) (Sub Inspector Taluk) பணிக்குமொத்தம் 933 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், ஆண்களுக்கு – 654 பணியிடங்கள், பெண்களுக்கு – 279 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    தமிழ்நாடு காவல்துறை துணைப் பணிப்பிரிவு கீழ், சப் இன்ஸ்பெக்டர் (ஆயுதப்படை) (Armed Reserve) பணிக்கு 366 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், ஆண்களுக்கு – 255 பணியிடங்கள், பெண்களுக்கு – 111 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    TNUSRB SI தேர்வுக்குத்தயாராகும் ஆர்வமுள்ள தேர்வர்கள், TNUSRB SI 2025 அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிடப்பட்ட விரிவான பணியிட விபரங்களை இங்கே காணலாம்.

    TNUSRB SIதேர்வு 2025 –தமிழ்நாடுசப்இன்ஸ்பெக்டர்பணியிடங்கள்
    பதவியின்பெயர்பணிப்பிரிவுபணியிடங்கள் (ஆண்கள்)பணியிடங்கள் (பெண்கள்)மொத்த SIபணியிடங்கள்
    சப் இன்ஸ்பெக்டர் (தாலுகா)தமிழ்நாடு காவல்துறை துணைப் பணிப்பிரிவு654279933
    சப் இன்ஸ்பெக்டர் (ஆயுதப்படை)255111366
    மொத்தம்9093901,299

    வயதுவரம்பு

    தமிழ்நாடுகாவல் துறையில் காலியாக உள்ள 1,299 சப் இன்ஸ்பெக்டர் (SI) பணியிடங்களை நிரப்பநடைபெற இருக்கும் TNUSRB SI 2025 தேர்வுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ள தேர்வர்கள் 1 ஜூலை 2025 தேதியின்படி, குறைந்தபட்சம் 20 வயதை நிறைவு செய்துஇருக்க வேண்டும் மற்றும் 30 வயதை கடந்திருக்கக் கூடாது.

    விண்ணப்பதாரர்கள் 2 ஜூலை 1995 தேதி அல்லது அதன்பின்னரும், 1 ஜூலை 2005 தேதி அல்லது அதற்குமுன்பும் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

    TNUSRB SI தேர்விற்கானவயது வரம்புக்கான தகுதி நிர்ணயிக்கும் கடைசி தேதி 1 ஜூலை 2025 என்று TNUSRB SI Exam 2025 அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    TNUSRB SIதேர்வு 2025:வயதுவரம்பு
    பதவியின்பெயர்குறைந்தபட்சவயதுஅதிகபட்சவயது
    சப் இன்ஸ்பெக்டர் (தாலுகா & ஆயுதப்படை)20 வயது30 வயது

    கல்வித்தகுதி

    சப்இன்ஸ்பெக்டர் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கீழ் ஏதேனும் ஒருபாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

    சம்பளவிவரம்

    சப்இன்ஸ்பெக்டர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.36,900 முதல் ரூ.1,16,600 வரை சம்பளம் வழங்கப்படும்.

    தேர்வுசெய்யப்படும்முறை

    சப்இன்ஸ்பெக்டர் பணி தேர்விற்கான பொதுவிண்ணப்பதார்களுக்கு தமிழ் மொழி தகுதித் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்கூறு அளத்தல் தேர்வு, உடற்தகுதி தேர்வு, உடல்திறன் தேர்வு, நேர்முக தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

    காவல்துறை சார்ந்த விண்ணப்பதார்களுக்கு முதல்நிலை எழுத்துத் தேர்வு, முதன்மைத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

    இறுதியாகதேர்வு செய்யப்பட்டவர்கள் இறுதி பட்டியல் தமிழ்நாடுசீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

    அதனைத்தொடர்ந்து நடைபெறும் மருத்துவப் பரிசோதனைக்கு பின்னர் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கானநியமனம் தேர்வானவர்களுக்கு வழங்கப்படும்.

    எப்படிவிண்ணப்பிப்பது?

    இந்தசப் இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் https://www.tnusrb.tn.gov.in/ என்றதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

    TNUSRB SI தேர்விற்கு 7 ஏப்ரல் 2025 முதல் தேர்வர்கள் விண்ணப்பிக்க தொடங்கலாம்.

    இந்தசப் இன்ஸ்பெக்டர் தேர்விற்கு விண்ணப்பதாரர்கள் 3 மே 2025 தேதி வரை ஆன்லைன்வாயிலாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

    இந்த TNUSRB SI 2025 தேர்விற்குநேரடியாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இங்க க்ளிக் செய்யவும்:

    TNUSRB Sub Inspector Exam 2025 Official Recruitment – Direct Link to Apply (Start Applying from 7 April 2025)

    TNUSRB SIதேர்வு 2025:முக்கியதேதிகள்

    தமிழ்நாடுகாவல் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 4 ஏப்ரல் 2025 அன்று TNUSRB SI தேர்வு 2025 அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

    இந்த TNUSRB SI 2025 தேர்வுக்குத்தயாராகும் ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வின் முக்கிய தேதிகளை கீழே காணலாம்:

    TNUSRB SIதேர்வு 2025:முக்கியதேதிகள்
    நிகழ்வுதேதி
    TNUSRB SIதேர்வு 2025அறிவிப்புவெளியான தேதி4 ஏப்ரல் 2025
    TNUSRB SIதேர்வு 2025ஆன்லைன்விண்ணப்பம்தொடங்கும்தேதி7 ஏப்ரல் 2025
    TNUSRB SIதேர்வு 2025விண்ணப்பிக்ககடைசிதேதி3 மே 2025
    TNUSRB SIதேர்வு 2025ஆன்லைன்கட்டணம்செலுத்துகடைசிதேதி3 மே 2025
    TNUSRB SIதேர்வு 2025ஆன்லைன்விண்ணப்பதிருத்தகடைசிதேதி13 மே 2025
    TNUSRB SIதேர்வு 2025தேதிபின்னர் அறிவிக்கப்படும்

    TNUSRB SI தேர்வு 2025-க்கான தேர்வு தேதிகள், பொது விண்ணப்பதாரர்கள் (Open Candidates) மற்றும் காவல் துறை ஒதுக்கீட்டுக்குட்பட்ட விண்ணப்பதாரர்கள் (Police Departmental Quota Candidates) ஆகியோருக்காக, தமிழ்நாடு காவல் பணியாளர் தேர்வு வாரியாத்தால்(TNUSRB) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

    FAQs

    A. The TNUSRB SI Official Notification 2025 for the direct recruitment of 1299 Sub Inspector of Police vacancies was released by the Tamil Nadu Uniformed Services Recruitment Board (TNUSRB) on 4 April 2025.
    A. The TNUSRB announced the TNUSRB SI Exam 2025 Official Notification for a total of 1299 Sub Inspector of Police vacancies on 4 April 2025. This 1299 SI vacancies were for the recruitment of Sub Inspector of Police (Taluk) and Sub Inspector of Police (Armed Reserve) in the Tamil Nadu Police Subordinate Service. Other than this, 53 shortfall vacancies were also announced in the TNUSRB SI Official Notification 2025.
    A. As mentioned in the TNUSRB SI Exam 2025 Official Notification, candidates applying for the TNUSRB SI Exam 2025 will have to within the age of 20 years and 30 years as on 1 July 2025.
    A. Candidates can start applying for the TNUSRB SI Exam 2025 for the recruitment of 1299 Sub Inspector vacancies from 7 April 2025.
    A. Candidates can apply for the TNUSRB SI Exam 2025 for the recruitment of 1299 Sub Inspector of Police (Taluk & Armed Reserve) vacancies until 3 May 2025.

    Related Railways Exams

    TNUSRB SI Exam
    TNUSRB Police Constable (PC) Exam

    Veranda RACE’s TNUSRB Triumphants